டெல்லியில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் : நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 12:03 pm

டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசினார்.

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுள்ளார். புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். புதிய துணை ஜனாதிபதியாக பெறுப்பேற்றுள்ளதற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.

பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்தித்து பேசினார். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி கூறுகிறார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!