ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு : மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. துப்பு துலங்காததால் திணறும் போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 11:01 am
6 Dead - Updatenews360
Quick Share

ஜம்முவின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த சகினா பேகம், அவரது மகள்கள் நசீமா அக்தர், ரூபினா பானோ, சகினா பேகத்தின் மகன் ஜாபர் சலீம், அவரது உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது ஆகிய 6 பேர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசேதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 248

0

0