ஒருவழியாக ஆளும் கட்சியுடனான டீலிங் வெற்றி… நிம்மதியில் இண்டியா கூட்டணி…. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டி தெரியுமா…?

Author: Babu Lakshmanan
22 February 2024, 4:25 pm
Sonia_Rahul_UpdateNews360
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் போட்டியிடும் ஆம்ஆத்மி – காங்கிரஸ் கட்சியினரிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் 9ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல, பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் இண்டியா எனும் கூட்டணியை அமைத்து போட்டியிட திட்டமிட்டது.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியதும், இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு செய்வதில் பல்வேறு மாநில கட்சிகளுக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதனால், மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். அதேபோல, பஞ்சாப்பில் மட்டும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம்ஆத்மி அறிவித்தது.

உத்தரபிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகளில் 17 ல் காங்கிரசும், 63ல் சமாஜ்வாதியும் போட்டியிட முடிவு செய்து பேச்சுவார்த்தையை இறுதி செய்து விட்டன.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவதில் என்பதில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்து வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 3 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

அதேபோல, ஹரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிட இருப்பதாகவும், குஜராத்தில் 24 தொகுதிகளில் காங்கிரசும், 2 தொகுதியில் ஆம் ஆத்மியும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 231

0

0