காங்கிரசுக்கு எகிறும் மவுசு… 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும் : ப.சிதம்பரம் நம்பிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 8:41 pm

காங்கிரசுக்கு எகிறும் மவுசு… 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும் : ப.சிதம்பரம் நம்பிக்கை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களை எம்.பி.யுமான ப.சிதம்பரம் கொல்கத்தாவில் இன்று செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்து மதத்திற்கோ அல்லது இந்துக்களுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. மேலும் மோடியை இந்துக்களின் பாதுகாவலர் என்று முன்னிறுத்துவதற்காக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் இந்து எதிர்ப்பு என்று சாயம் பூசுவது பா.ஜ,கவின் உத்தி.

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி முக்கியமானவர். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தனது கோட்டையை தக்கவைத்துக் கொள்ளும் திறன் அவரிடம் உள்ளது.

இது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.அனைத்து மாநிலங்கள் குறித்து என்னால் பேச முடியாது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கேரளாவில் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளை பிரித்துக் கொள்ளும். பா.ஜ,கவுக்கு ஒரு இடத்தைக்கூட விட்டு வைக்காது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் பிரபலமாக உள்ளது. 2019-ஐ காட்டிலும் காங்கிரஸ் அதிக இடங்களை பெறும்.

கச்சத்தீவு பிரச்சனை முடிந்தது. 50 வருடத்திற்கு முன்னதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. தேர்தல் வரும்போது,பாஜக கையில் எடுக்கிறது.

கடந்த 10 வருடமாக இந்த பிரச்சினையை பிரதமர் மோடி ஏன் எழுப்பவில்லை?. சீனா இந்தியா எல்லையில் ஊடுருவிய உண்மை வெளிவந்த நிலையில், இந்த பிரச்சனை எழுப்பப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?