போலீசாரை கொலை செய்ய சதி …ஜாமின் கேட்ட நடிகர் திலீப்: பிப்., 7ம் தேதி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

Author: Rajesh
5 February 2022, 8:58 am
Quick Share

நாகர்கோவில்: நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கின் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தொடர்பாக பிப்ரவரி 7ம் தேதி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.மேலும் இச்சம்பவத்திற்கு சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளான சோஜன், சுதர்சன் ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க நடிகர் திலீப், முன்ஜாமீன் கேட்டு கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கர் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், திலீப்பிடம் போலீசார் 3 நாள் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதற்கு, முன் ஜாமின் கேட்டு தீலீப், அவரது தம்பி அனூப், மைத்துனர் சுராஜ், டிரைவர் அப்பு உட்பட ஆறு பேர் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினர். திலீப்புக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் பிப்., 7ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

Views: - 658

1

0