யாருடா பீ டீம்? ஆளுங்கட்சியை விமர்சித்து செருப்பை எடுத்துக்காட்டி ஆவேசமாக பேசிய பவர் ஸ்டார் : கையாளாகாத கட்சி என விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2022, 3:43 pm

ஆளும் கட்சியினரை குறிப்பிட்டு ஆந்திராவில் செருப்பை எடுத்துக்காட்டி ஆவேசமாக பேசிய அரசியல் கட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி ஆன நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு பி டீம் கட்சியாக தன்னுடைய கட்சியை அவர் நிர்வகித்து வருகிறார் என்றும், மற்ற கட்சியினரிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு தன்னுடைய கட்சி அவர் நிர்வகித்து வருகிறார் என்றும் ஆந்திர ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அமராவதி சமீபத்தில் மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே இன்று அவர் உரையாற்றினார்.

அப்போது திடீரென்று தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை உயர்த்தி காட்டி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு அவர் பேசினார். மற்ற கட்சிகளிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு பேக்கேஜ் அடிப்படையில் கட்சி நடத்துகிறேன் என்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்.

மேலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குண்டர்களே என்னுடைய பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள் என்றும், மகன்களே, கையால் ஆகாதவர்களே, குண்டர்களே என்பது உட்பட பல்வேறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரை எச்சரிக்கும் வகையில் ஆவேசமாக பேசினார்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது செருப்பை கையில் எடுத்து கொண்டு ஒரு மற்றொரு அரசியல் கட்சியை குறிப்பிட்டு அக்கட்சியினரை செருப்பால் அடிப்பேன் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!