‘விளக்குக்குள்ள வெள்ளை அறிக்கையா…?’ சட்டப்பேரவையில் தமிழை பிழையுடன் பேசிய திமுக எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் கிண்டல்..!!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 2:28 pm
Quick Share

சென்னை : சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழை பிழையுடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இந்தியை நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திராவிட கட்சிகள் கங்கனம் கட்டிக் கொண்டு இருக்கிறது. அதிலும், குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சி நடந்து வருவதாகவும், இந்தியை எந்த வழியிலும் அனுமதிக்க மாட்டோம் என்று திமுகவினர் சூளுரைத்து வருகின்றனர். அதேவேளையில், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் பெருமைகளையும் உலகறியச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

CM Stalin - Updatenews360

இதனிடையே, இந்தி மொழியை கட்டாயம் என்று யாரும், எங்கும் சொல்லவில்லை என்றும், அப்படி கட்டாயமாக்கினால், தமிழக பாஜக அதனை எதிர்க்கும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழை பிழையுடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியை எதிர்க்கும் திமுக, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே இதன் விளைவு என்கின்றனர் நெட்டிசன்கள்

மாற்று மொழிகள் தேவையில்லை என்று கூறும் திமுகவினர், தாய் மொழியான தமிழுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, தமிழ் மொழியை சரளமாக பேசுவதிலும், படிப்பதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதே கடும் விமர்சனங்களை உண்டு பண்ணியுள்ளது. தற்போது, அடுத்ததாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் அந்தப் பட்டியலில் இணைந்திருப்பது திமுக தலைமைக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 322

0

0