3 வயது குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த கொடூர தந்தை : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 2:11 pm

3 வயது மகனின் காலை பிடித்து தூக்கி தரையில் அடித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி நகரில் உள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் முனி ராஜா, சுவாதி தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுடைய மூன்று வயது மகன் நிகில்.

நிகில் அவ்வப்போது வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் மீண்டும் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று சுவாதி தன்னுடைய கணவன் முனிராஜாவிடம் வற்புறுத்தி கூறினார்.

இதனால் ஆவேசம் அடைந்த முனி ராஜா இன்று காலை குழந்தை நிக்கில் காலை பிடித்து தூக்கி தரையில் அடித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த காளஹஸ்தி போலீசார் முனி ராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையால் தரையில் அடித்து கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?