டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: பரிசோதனையை நிறுத்த எய்ம்ஸ் முடிவு..!!

Author: Rajesh
10 February 2022, 11:41 am

புதுடெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பரிசோதனையை நிறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பரவல் ஏற்பட தொடங்கியதும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்ற நகர மருத்துவமனைகளுடன் இணைந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தேசிய வழிகாட்டுதல்களின்படி, வழக்கம்போல் மேற்கொண்டு வந்த கொரோனா பரிசோதனையை நிறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையின் உள்நோயாளிகள், சிறிய அல்லது பெரிய அளவிலான அறுவை சிகிச்சை, நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதனால், ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்வது என்ற முடிவை கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  • tvk reference in tourist family movie தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?