மீண்டும் டெல்லியை மிரள வைக்கும் கனமழை… வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் ; உணவு கிடைக்காமல் அவதி..!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 11:58 am

டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சில வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

குறிப்பாக, டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இமாச்சலில் அத்னிகுண்ட் தடுப்பணை வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டதால், யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என எனங்கு பார்த்தாலும், வெள்ளாக்காடாக காட்சியளிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கனமழை ஓய்ந்ததால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்த நிலையில், இன்று மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?