தடுப்புகளை தாண்டிய பிரியங்காவுடன் போலீசார் தள்ளுமுள்ளு ; ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் போலீசாரால் கைது!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 2:19 pm
Quick Share

டெல்லியில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்., எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபல் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை தொடங்கினர்.

அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவற்றை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இந்த நிலையில், போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதேபோல், மற்ற முன்னணி தலைவர்களையும் காவல்துறை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றுள்ளது. அந்த சமயம், அங்கிருந்த தடுப்புகளை தாண்டி பிரியங்கா காந்தி சென்றார். அப்போது, போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

பின்னர், போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து தரையில் அமர்ந்து பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் காரணமாக டெல்லி களேபரமாக காட்சி அளிக்கிறது.

Views: - 123

0

0

Leave a Reply