பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி : நையப்புடைத்த போலீசார்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 10:01 pm
Govt Bus Glass Broken - Updatenews360
Quick Share

கேரளா : குடி போதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை கல் எறிந்து அடித்து உடைக்கும் இளைஞனின் வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூர்  பேருந்து நிலையத்தில் குடிபோதையில் மேல் சட்டை அணியாமல் வந்த இளைஞர் ஒருவர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது கல் எறிந்து பேருந்தின் முன் பக்க கண்ணாடியை   உடைத்துள்ளார்.

இதில் கோபமடைந்த பேருந்து நிலைய காவலாளி அந்த இளைஞனுக்கு  அடியும் கொடுத்துள்ளார். தொடர்ந்து கொல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில்  அஞ்சல் , பாரதிபுரம் பகுதியை சார்ந்த  மணிக்குட்டன் என்பவர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் அந்த இளைஞனை கைது செய்து  வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள்  அங்கிந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பேசு பெருளாக மாறி வருகிறது.

Views: - 1277

0

0