மாரடைப்பு ஏற்பட்டு எம்.எல்.ஏ. பரிதாப பலி : குடும்பத்துடன் துபாய் சென்ற போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 9:01 pm
MLA Dead - Updatenews360
Quick Share

விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் துபாய் சென்ற எம்எல்ஏ மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த ரமேஷ் லட்கே எம்எல்ஏ விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
அவரது குடும்பத்தினர் ஷாப்பிங் சென்று இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவர் சட்டப்பேரவைக்கு 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 2002 மற்றும் அண்ட் 1,009 இல் நடந்த நகராட்சி தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 388

0

0