மீண்டும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் முதலமைச்சர்… 4வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை…!

Author: Babu Lakshmanan
13 January 2024, 12:04 pm
Quick Share

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது.

இதனைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று சம்மன்களை முதலமைச்சர் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில், இந்த முறை விசாரணைக்கு ஆஜராவாரா? அல்லது புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 225

0

0