பிரதமர் மோடியை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் வேவேந்திர பட்னவிஸ் : மராட்டிய நிலவரம் குறித்து முக்கிய விவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 7:15 pm
Maharastra CM Meet PM - Updatenews360
Quick Share

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசினர். தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது மகாராஷ்டிராவின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினர். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கு ஒரே மாதிரியான கடவுள் சிலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 260

0

0