சுற்றி வளைக்கப்படும் கார்த்தி சிதம்பரம்… ஒரே மாதத்தில் 2 முறை சோதனை… இறுக்கும் விசா முறைகேடு வழக்கு..!!

Author: Babu Lakshmanan
9 July 2022, 4:34 pm
Quick Share

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் உள்ள ஒரு அறையில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக கார்த்தியிடமும் நேரிலும் விசாரணை நடத்தப்ட்டது.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் வீட்டில் உள்ள ஒரு அறையில் டிஜிபி தலைமையில் 7 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு அறையின் சாவி மட்டும் லண்டன் சென்றிருந்த சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்தது. தற்போது அவர்கள் வந்த பிறகு சாவியை பெற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Views: - 105

0

0