பஸ், லாரி ஓட்டுநர்கள் கூட நன்றாக கட்டுரை எழுதுவார்கள்.. புனே சிறுவனுக்கு கிடைத்த நீதியை விமர்சித்த ராகுல்!
Author: Udayachandran RadhaKrishnan22 மே 2024, 7:00 மணி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ‘போர்ஷே டேகான்’ எனும் சொகுசு காரை அதிக வேகத்தில் ஒட்டி வந்த 17 வயது சிறுவன் , சாலையில் சென்ற இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியில் அதில் பயணித்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு பின்னர் அக்கம் பக்கத்தினரே சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வழக்கில் சிறுவனுக்கு 17 வயது என்பதால் அவருடைய தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சகத்தில் வெடிகுண்டா? மின்னஞ்சல் மூலம் மிரட்டல் : தீவிர சோதனை!
சிறுவனுக்கு அடுத்த 15 மணிநேரத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டான். விபத்து ஏற்படுத்தி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொழிலதிபரின் 17வயது மகனுக்கு ஜாமீன் கிடைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
17வயது சிறுவனுக்கு மகாராஷ்டிரா நீதிமன்றம் , போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கட்டுரை எழுத வேண்டும். போக்குவரத்து காவலருடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புனேவில் 17 வயது சிறுவன் மது அருந்தி போர்ஷை சொகுசு காரை ஓட்டி 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமாகி, பின்னர் கட்டுரை எழுதச்சொல்லி விடுவிக்கப்பட்டுவிட்டான்.
கட்டுரை எழுதினால் வழக்கில் இருந்து விடுப்படலாம் என்றால், பஸ், லாரி ஓட்டுனர்களிடம் கேளுங்கள். டெம்போ ஓட்டுனர்களிடம் கூட கேளுங்கள் அவர்களளும் கூட நன்றாக கட்டுரை எழுதுவார்கள் என்று விமர்சனம் செய்து பிரச்சார கூட்டத்தில் பேசினார் ராகுல் காந்தி.
0
0