காரில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர் ; மதுபான விடுதியின் பார்க்கிங்கில் பகீர் சம்பவம் ; அதிர்ச்சியில் திரையுலகம்..!!
Author: Babu Lakshmanan21 நவம்பர் 2023, 8:45 காலை
தனியார் மதுபான விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பிரபல நடிகர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் பாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஓட்டலின் மதுபான விடுதியில் கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது. கார்களின் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட நிலையில், உள்ளே ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. இதைக் கண்ட ஓட்டல் ஊழியர்கள், கார் கண்ணாடியை தட்டியுள்ளனர். எவ்வளவு தட்டியும் அவரிடம் எந்த பதிலும் வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், கார் கண்ணாடியை உடைத்துப் பார்த்த போது, உள்ளே இருந்தவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் (47) என்பது தெரியவந்தது. அய்யப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
வினோத் தாமஸ் உயிரிழந்தது எப்படி இறந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0