விவசாயிகள் மீது நள்ளிரவிலும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு… எல்லையில் துணை ராணுவத்தினர் குவிப்பு… டெல்லியில் பதற்றமான சூழல்…!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 10:36 am

டெல்லியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது போலீசார் நள்ளிரவிலும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்தும் கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில், பென்சன், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி சென்றனர்.

பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைய முயன்றதால் அவர்களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகளில் தடுப்புகளை அமைத்தனர்.

ஆனால், அவற்றை அகற்றி மேற்கொண்டு முன்னேறி வர முயற்சித்தனர். அப்போது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர். இருப்பினும், சாக்கு பைகளை முகத்தில் கட்டியவாறு, கண்ணீர் புகையின் தாக்கத்தை சமாளித்துக் கொண்டே, விவசாயிகள் தடுப்புகளை கடந்து வர முயற்சித்தனர். ஆனால், அடுத்தடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினார்.

இதனடையே, கைது செய்யப்படும் விவசாயிகளை டெல்லி பவானாவில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தை தற்காலிக சிறையாக மாற்றும் திட்டத்தை டெல்லி மாநில அரசுக்கு அனுப்பி அனுமதி கோரியது. ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாகக் கூறி இந்த திட்டத்தை மாநில அரசு நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், நள்ளிரவு நேரத்திலும் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். தொடர்ந்து, முன்னேறி வந்த விவசாயிகளை தற்போது பஞ்சாப்- அரியானாவின் ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், ஷம்பு எல்லையில் ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!