பேஸ்புக் நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது உத்தவ் தாக்கரே கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை : ஷாக் வீடியோ.!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 8:21 am

பேஸ்புக் நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது உத்தவ் தாக்கரே கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை : ஷாக் வீடியோ.!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிக்கொண்டு இருந்த உத்தவ் பாலாசகேப் தாக்கரே சிவசேனா கட்சி முன்னாள் எம்.எல் ஏ மகன் அபிஷேக் மீது திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அபிஷேக் முன்னாள் கவுன்சிலர் ஆவார். அபிஷேக் நேற்று(பிப்ரவரி 8) இரவு மும்பை தாஹிசார் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மோரிஸ் என தெரியவந்துள்ளது. முன்னாள் சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்எல்ஏ வினோத் மகன் அபிஷேக் ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேச மோரிஸ் அபிஷேக்கை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார்.

பேஸ்புக் லைவ் வீடியோ பேசிக்கொண்டு முடிந்து அபிஷேக் எழுந்து புறப்பட இருந்த நேரத்தில் திடீரென மோரிஸ் தன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அபிஷேக்கை சரமாரியாக மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுட்டார். இதைத் தொடர்ந்து மோரிஸ் துப்பாக்கிகள் தனித்தனி சுட்டுக் கொண்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் facebook லைவ் வீடியோவில் நேரலையானது, இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த போராடிய இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இருப்பினும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கொலை சம்பவம் முன்விரோத காரணமாக நடந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!