தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி : ராமேஸ்வரம், குமரியில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 8:55 am
Rameswaram
Quick Share

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி : ராமேஸ்வரம், குமரியில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்..!!

தை அமாவாசை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் அதிகாலையிலேயே குவிந்த ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். எள் பச்சரிசி தர்ப்பபை வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர். திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார்.

இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை அமாவாசை தலம்’ என்றும் அழைப்பார்கள். தை அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இன்று தை அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் இன்று அதிகாலையில் கடலில் புனித நீராடி லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமத்தில் வேத விற்பனர்கள் மூலம் பலிகர்மம் பூஜை செய்தனர்.வாழை இலையில் பச்சரிசி, பூ, தர்ப்பை புல், எள் போன்றவற்றை வைத்து அவற்றை தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு மீண்டும் புனித நீராடினர். பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதிஅம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 522

    0

    0