கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சிதான்… திடீரென எம்ஜிபி, சுயேட்சைகளுடன் கைகோர்த்த பாஜக : முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
10 March 2022, 1:34 pm
Quick Share

கோவா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பாஜக ஆட்சிதான் என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவின.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளில் தற்போது வரை யாரும் பெரும்பான்மையை எட்டவில்லை.

Pramod_Sawant_UpdateNews360

ஆட்சியைப் பிடிக்க 21 இடங்கள் என்ற நிலையில், பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், ஆம்ஆத்மி 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்த் கட்சி உள்ளிட்ட கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் உத்பல் பாரிக்கர் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், கோவாவில் பாஜக ஆட்சி அமைவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா கோமந்த் கட்சி மற்றும் சுயேட்சைகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைப்பதாகவும் அவர் கூறினார்.

Views: - 814

0

0