கேப்சூல்களில் தங்கம்… மாத்திரை போல விழுங்கி எடுத்து வந்த பயணி ; அயன் பட பாணியில் நடந்த நூதன கடத்தல் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 7:31 pm

தெலங்கானா: கேப்சூல்களில் நிரப்பி பெருங்குடலில் அடைத்து துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப்பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு விமான மூலம் பயணிகள் வந்தனர். அவர்களில், ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, அவருடைய வயிற்றில் கேப்சூல்கள் வடிவத்தில் மர்ம பொருட்கள் வடிவத்தில் இருப்பது தெரிய வந்தது. அந்த பயணி பெருங்குடலில் மறைத்து கடத்தி வந்த கேப்சூல்களை வெளியில் எடுத்த அதிகாரிகள், அவற்றை அறுத்து பார்த்தபோது உள்ளே தங்கப் பவுடர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஆண் பயணி கேப்சூல்களில் நிரப்பி வயிற்றில் பதுக்கி கடத்தி வந்த 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க பவுடரை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!