திருப்பதியில் கைத்தட்டி பிறந்தநாள் வாழ்த்து பாடிய ஆளுநர் தமிழிசை : சாமி தரிசனத்தின் போது சுவாரஸ்யம்..!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 1:53 pm
Tamilisai - Updatenews360
Quick Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் நேரம் மாற்றி அமைத்தது பற்றி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். தேவசான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசீ செய்தனர்.

அதன் பிறகு கோயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் விஐபி பிரேக் தரிசனத்தை நேரத்தை மாற்றியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

தேவஸ்தானத்தின் இந்த முடிவு காரணமாக சாதாரண பக்தர்கள் காலை நேரத்தில் முதன் முதலில் ஏழுமலையான வழிபடுகின்றனர். இது சாதாரண பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை ஆகும்.

விஐபி தரிசனம் நேரத்தை மாற்றி அமைத்துள்ள காரணத்தால் திருப்பதியில் தங்கும் அறைகளுக்ககு கட்டுப்பாடு குறைந்துள்ளது.

இன்று உலக மாற்று திறனாளிகள் தினம். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்னம்பிக்கையோடு பாடுபட்டு முன்னுக்கு வரவேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார்.

கோயில் வெளியே சில குழந்தைகள் அவரை அழைத்த நிலையில் அங்கே சென்று அந்த குழந்தையின் பிறந்த நாள் என தெரிந்து கொண்டு அந்த சிறுவர்களுக்கு கைத்தட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் .

Views: - 364

0

0