ராகுல் காந்திக்கு க்ரீன் சிக்னல்… இவ்வளவு பெரிய தண்டனை எதற்கு? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2023, 2:17 pm
Rahul - Updatenews360
Quick Share

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றங்களை நாடிய ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

நேற்று ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரிகையில், தான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் மன்னிப்பு கோர முடியாது என குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது அதிகபட்ச தண்டனை. இது ஜாமீன் பெறக்கூடாத குற்ற சம்பவ வழக்கு கிடையாது. சாதாரண வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2 நாடளுமன்ற கூட்டத்தொடரை நான் இழந்துவிட்டேன். சாதாரண அவதூறு வழக்கு காரணமாக 8 ஆண்டுகள் மக்கள் மத்தியில் எனது குரல் ஒலிக்க தடை விதிக்கப்படுகிறது. நான் நீரவ் மோடி, லலித் மோடி பற்றி கூறினேன். ஆனால் அவர்கள் எனக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. 13 கோடிக்கும் அதிகமானோர் மோடி சமூகத்தில் உள்ளனர். அனால், பாஜக கட்சியை சேர்ந்தவர் தான் என்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளும் பாஜகவினர் தொடுத்தவையே என அந்த பிரமாண பத்திரத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதன் காரணமாக தனி நபரின் உரிமை மட்டுமின்றி, அவருக்கு வாக்களித்த ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. அதிகபட்ச தண்டனை ராகுல்காந்திக்கு ஏன் வழங்கப்பட்டது என இது தொடர்பாக புகார் அளித்த மனுதாரர், குஜராத், சூரத் கீழமை நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

புகார்தாரர் தரப்பில் வாதிடுகையில், ராகுல்காந்தி, குறிப்பிட்டு வேண்டுமென்றே அவமரியாதை செய்ய வேண்டும் என்றே மோடி எனும் பெயர் குறித்து அப்படி பேசியுள்ளார் எனவும் வாதிடப்பட்டது இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து வழக்கை விசாரித்த பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார் என்றும் மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Views: - 338

0

0