முதலிரவில் கணவன் செய்த செயல்… அதிர்ச்சியடைந்த மனைவி தாயாரிடம் சொல்லி கதறல் ; கைதான மாப்பிள்ளை…!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 9:18 pm

திருமணம் நடந்து முதலிரவின் போது கணவன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸில் புகார் அளித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாகு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரின் பெற்றோர்களும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி இருவீட்டார் முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிவடிந்ததையடுத்து, வீரபாகுக்கும், அவரது மனைவிக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலிரவில் கணவன் – மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபட்டனர். அப்போது, மனைவிக்கே தெரியாமல் தனது முதலிரவு நிகழ்வை, செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அவர்களது முதலிரவு காட்சியை, கொஞ்சமும் வெட்கமே இல்லாமல், தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ அவரது ஊரில் உள்ளவர்களிடம் வைரலான நிலையில் மனைவியின் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் மாப்பிள்ளையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிறையில் அடைத்தனர்.

கட்டிய மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த வீரபாகுவை அந்தப் பகுதியினர் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?