மருமகனுக்கு சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் ; இப்படியொரு திருமண வரவேற்பா..? வைரலாகும் வீடியோ..!

Author: Babu Lakshmanan
18 February 2023, 9:05 am

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு சிகரெட் மற்றும் பான் மசாலா கொடுத்து மாமியார் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளைக்கு மணமகள் வீட்டார், இனிப்பு கொடுத்தோ, பாலும், பழமும் கொடுத்தோ வரவேற்பது வழக்கம். ஆனால், மருமகனுக்கு சிகரெட் மற்றும் பான் மசாலா கொடுத்து மாமியார் வரவேற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த திருமண விழாவில், உறவினர்கள் முன்னிலையில் சோபாவில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளைக்கு அவரது மாமியார் வாயில் சிகரெட்டை வைக்கிறார். மாமனார் அந்த சிகரெட்டைப் பற்ற வைக்கிறார். பின் அவரே சிகரெட்டை மணமகன் வாயில் இருந்து எடுத்து விடுகிறார்.

இது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவரும் நிலையில், பலவிதமான கமெண்ட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. பீகார், ஒரிசா மாநிலங்களிலும் இதே போன்ற சடங்கு நடைபெறுவதாக சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஒருசிலர், புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்றும், பலர், இது வெறும் சடங்கு மட்டும்தான் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!