எதிர்க்கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லாத போது இண்டியா கூட்டணி மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் : பிரதமர் மோடி அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 7:55 pm
pm
Quick Share

எதிர்க்கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லாத போது இண்டியா கூட்டணி மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் : பிரதமர் மோடி அதிரடி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .

இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

மத்திய பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் மிகக் கடுமையாக உழைக்கின்றது. பாஜக ஆட்சியில் கிராமப்புற மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 4.8 கோடி வீடுகள் கட்டி முடிக்க காங்கிரசுக்கு 100 ஆண்டுகள் பிடித்திருக்கும். 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல.. நாட்டின் சாதனையை தான் பேசுகிறோம்.

ஒரு முகத்தை மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்த நினைப்பதால் இழுத்து மூடும் நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றி முடிக்க 3 தலைமுறைகள் தேவைப்படும். காங்கிரஸ் கட்சியின் மந்தமான ஊர்ந்து ஊர்ந்து செல்லும் வேகம் . மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி சிதறிவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கை போய்விட்டது. காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தை நம்பி உள்ளது.

ஒரு சிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உலக நலனுக்காக இந்தியா பாடுபடுவதை ஜி20 மாநாட்டின் போது உலக தலைவர்கள் புரிந்துகொண்டனர்.

இந்தியர்கள் சோம்பேறி என்று நேரு கருதி இருந்தாரா? தனித்து போட்டியிட மம்தா பானர்ஜி முடிவு செய்தது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கே ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை வராத போது நாட்டுக்கு எப்படி நம்பிக்கை வரும்?.. மகளிர் சக்திகளை உணர்ந்து அதற்கேற்ற திட்டங்களை பாஜக கொண்டுவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 206

0

0