பிரியாணியில் கிடந்த பல்லி வால்…? உணவு ஆர்டர் போட்டவருக்கு ஷாக்… ஆக்ஷனில் இறங்கிய உணவுப் பாதுகாப்புத்துறை!

Author: Babu Lakshmanan
1 January 2024, 6:47 pm
Quick Share

ஐதராபாத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஐதராபாத்தில் பிரபலமான மெரிடியன் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதாக வெளியாகி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் பிரபலமான மற்றொரு உணவகமான டெக்கான் எலைட் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டெக்கான் எலைட் உணவகத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது, பிரியாணியின் மாதிரியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

இதனிடையே, இந்தப் பிரியாணியை சாப்பிட்ட 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வீடியோ வைரலான நிலையில், அது பல்லியின் வால் இல்லை என்றும், அது ஒருவகையான மீன் என்று ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 297

    0

    0