ஹமாஸ் விவகாரத்தில் நான் எந்த கையெழுத்தும் போடவில்லை.. மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி விளக்கம் : எதிர்க்கட்சிகள் சந்தேகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 7:41 pm
Lekhi
Quick Share

ஹமாஸ் விவகாரத்தில் நான் எந்த கையெழுத்தும் போடவில்லை.. மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி விளக்கம் : எதிர்க்கட்சிகள் சந்தேகம்!!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மூலம் பதில் அளிக்கப்படும். இந்த கேள்வி- பதில்கள் அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் மக்களவை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் நட்சத்திர கேள்விகள் எனப்படும் முக்கியமான கேள்விகளுக்கு அவையில் பதிலளிக்கப்படும். அப்போது சபாநாயகர் அனுமதி அளித்தால் உறுப்பினர்கள் கூடுதல் கேள்விகளை கேட்கலாம். இந்த நடைமுறைதான் நாடாளுமன்றத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த எம்.பி சுதாகாரன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டு அதற்கான பதிலுடன் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் ஆவணம் ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

அதில், குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் கீழ் தீவிரவாத அமைப்பாக கருதப்படும்” எனக் கூறப்பட்டு இருந்தது. அதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியின் கையெழுத்தும் இடம் பெற்று இருந்தது.

ஆனால், அத்தகைய எந்த ஒரு கோப்பிலும் நான் கையெழுத்திடவில்லை என்று மீனாட்சி லேகி கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மீனாட்சி லேகி தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், “தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி பற்றிய எந்த ஆவணத்திலும் நான் கையெழுத்து இடவில்லை. இதற்கு வெளியுறவுத்தூறை அமைச்சரும், பிரதமரும் பதில் அளிப்பார்கள்” என்று கூறியிருந்தார். மற்றொரு பதிவில், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனக் கூறினார்.

Views: - 270

0

0