இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது..!

12 August 2020, 10:24 am
Quick Share

சீனாவில் தொடங்கி உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் தனது உச்சகட்ட ஆட்டத்தை காட்டி வருகிறது.

நாட்டின், மிக முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது.

இருப்பினும் பிற நாடுகளை ஒப்பிடுகையில், மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில், இந்தியாவில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்தும், உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுகிறது.

இந்த சூழலில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வரை, 23,29,638 ஆக உயர்ந்துள்ளது. 46,091 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,39,600 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,914 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Views: - 6

0

0