தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா : சரித்திர சாதனை படைத்தது இஸ்ரோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 6:36 pm
Chandrayaan 3 - Updatenews360
Quick Share

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென்துருவத்தை ஆராய, ரூ.615 கோடி செலவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 14ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், நிலவின் தென்துருவத்தை நோக்கி இன்று மாலை 5.44 மணிக்கு பயணிக்க தொடங்கியது. அதன்படி, 8 கட்டங்களாக குறைக்கப்படும் பணி வெற்றிகரமாக நடைபெற்று, சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.

இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைடைத்துள்ளது.

Views: - 757

0

0