இனி ஆண்டுக்கு 2 முறை பொதுதேர்வு…. மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 4:59 pm
Publi - Updatenews360
Quick Share

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய கல்வி கொள்கையின் (NEP) அடிப்படையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கிறது மத்திய அரசின் கல்வி அமைச்சகம். இரண்டு முறை நடத்தப்படும் பொதுத்தேர்வில் இதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இரண்டு முறை பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதிய நேரம், வாய்ப்பு தரப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகள் படிக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று இந்தி மொழியாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 2024 கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளது.

Views: - 323

0

0