திடீரென மத சர்ச்சையில் சிக்கிய CWC இர்ஃபான்… போடா செங்கல் சைகோ… என லிஸ்ட் போட்டு பதிலடி…!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 4:06 pm
Quick Share

சென்னை ; மத சர்ச்சையில் சிக்க வைத்த நெட்டிசனுக்கு பிரபல யூடியூபர் இர்பான் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் புகழ்பெற்ற யூடியூபர்களில் ஒருவரான இர்ஃபான், உணவகங்களுக்கு சென்று அங்கு தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை குறித்து வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர். இவரது வீடியோக்களை பார்த்து பலர் அந்த ஓட்டல்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தற்போது வரை அவரது யூடியூப் பக்கத்தை 37 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். அதில், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் அவரை சமூகவலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கைவரிசை… நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது.. பக்தர்கள் ஷாக்!!!

தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர், பிரபல தொலைக்காட்சி ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், இர்ஃபான் 99 சதவீதம் முஸ்லிம் கடைகளுக்கு மட்டுமே ரிவ்யூ செய்து வருமானத்தை பெருக்கி வருவதாகவும், ஒரு சதவீதம் மட்டுமே இந்துக்கள் நடத்தி வரும் கடைகளில் ரிவ்யூ செய்வதாக நெட்டிசன் ஒருவர் சர்ச்சையான கேள்வியை எழுப்பினார்.

இதனால், கடுப்பான இர்ஃபான்,”அது எப்படி டா என் மதத்தை சேர்ந்தவர் கடை பேர் இருந்தா மட்டும், அங்க வந்து நொட்டுறீங்க”… எனக் கூறி இதற்கு முன் ரிவ்யூ செய்த இந்துக்களின் கடைகளின் பெயர்களை பட்டியலிட்டார். மேலும், பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி, எல்லாத்தையும் மதவெறியா திணிக்கிற உன் கிட்ட தான்டா இருக்கு செங்கல் சைக்கோ,” என பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 164

0

0