உக்ரைனை உருக்குலைக்கும் போர்: ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் பலி…கர்நாடகாவை சேர்ந்தவர்..!!

Author: Rajesh
1 March 2022, 3:31 pm
Quick Share

கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதுகுறித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரி சாலகிரியை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் விடுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு சென்றபோது இந்த தாக்குதலில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன் சேகரப்பா கார்கிவ் நகரில் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். மாணவர் உயிரிழந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.

Views: - 1281

0

0