போதைக்கு அடிமையாக்கி பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: பல் மருத்துவ மாணவர், துணை நடிகர் என 4 பேர் போக்சோவில் கைது..!!

Author: Rajesh
1 March 2022, 1:40 pm
Quick Share

சென்னை: விருகம்பாக்கம் ராமாபுரத்தில் ஊக்க போதை பொருள் கொடுத்து பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் பல் மருத்துவ கல்லூரி மாணவன், துணை நடிகர், பேராசிரியர் என நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் ராமாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வசந்த் கிரிஷ். இவர், பல் மருத்துவம் பயின்று வருகிறார். இவரது நண்பர்கள் சினிமா துணை நடிகர் சதீஷ் குமார்(22), கல்லூரி மாணவன் விஷால் (19), கல்லூரி பேராசிரியர் பிரசன்னா (24) ஆவர்.

இவர்கள் அனைவருக்கும், கஞ்சா மற்றும் ஊக்கா போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்நிலையில், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படிக்கிறார். இவர், பள்ளி முடிந்ததும் வசந்த கிரிஷ் வசித்து வரும் பகுதியில் பானி பூரி சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதை கவனித்து வந்த வசந்த் கிரிஷ் அந்த சிறுமியிடம் பேச்சுகொடுத்து, ஆசை வார்த்தை கூறி பின்னர் நாளடைவில் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர், அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று, ஊக்க போதைக்கொடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதை வீடியோவாக எடுத்து கொலை மிரட்டல் விடுத்தும் மேலும் ஊக்க போதைக்கு அடிமையாக்கி தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி, தனது நண்பர்களையும் அழைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் சிறுமி மிகவும் சோர்வாகி படுத்து விடுவாராம்.

இதனை கவனித்த பெற்றோர், அவர் ஒரு வித போதைக்கு அடிமையானதை கண்டுபிடித்தனர். பின்னர், விஷயத்தை கேள்விப்பட்டதும் பெற்றோர் அதிர்ச்சிய்யடைந்தனர். உடனடியாக, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதைதொடர்ந்து வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் உத்தரவுப்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பள்ளி மாணவிக்கு ஊக்கா போதை பொருள் கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்து வந்த பல் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவன் வசந்த் கிரிஷ், அவரது நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ் குமார்(22), கல்லூரி மாணவன் விஷால்(19), தனியார் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரசன்னா(32) ஆகியோர் மீது போக்சோ, கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பள்ளி மாணவியுடன் ஒன்றாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ள செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் புகார் அளித்த சில மணி நேரங்களில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்த போலீசாரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

போலீசார், கொலை மிரட்டல், போக்சோ என் நான்கு பிரிவுகளின் கீழ், வசந்த் கிரிஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து, வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 783

0

0