‘கிடைக்கும் வழிகளில் உடனடியாக வெளியேறுங்க’: கீவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்..!!

Author: Rajesh
1 March 2022, 1:02 pm
Quick Share

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனில் 6வது நாளாக ரஷ்யாவின் தாக்குதல் நீடித்து வருகிறது. நேற்று சற்று தணிந்த தாக்குதல் இன்று மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது.

கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

latest tamil news

மேலும், அவ்வபோது, உக்ரைன் தூதரகம் மூலம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, கீவ் நகரில் ரஷ்ய படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும், இன்று உடனடியாக வெளியேற வேண்டும்.

அங்கு கிடைக்கும் ரயில் அல்லது சாலை வழியாக எந்த வழியிலாவது வெளியேற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ் பகுதியில் ரஷ்யா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1289

0

0