பட்டொளி வீசிப் பறந்தது செங்கோட்டையில் தேசியக்கொடி: 6000 பேர் பங்கேற்ற கோலாகல விழா….!!

Author: Sudha
15 August 2024, 9:34 am

78வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார்.அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11 வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்

தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இவ்விழாவில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமார் 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த விழாவையொட்டி, டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பிரதமரின் உரையில் மத்திய அரசின் செயல்திட்டம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெற்றது. விக்சித் பாரத் என்பது ‘பெரிய பாய்ச்சல்’ என்று பொருள்படும். அதேபோல ‘அமிர்த காலத்துக்கு’ இது முக்கியமான பட்ஜெட் என்றும், இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லக் கூடியது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.2047 க்குள் இந்தியா அடையவிருக்கும் முன்னேற்றம் குறித்து பிரதமர் உரையாற்றினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!