‘பதஞ்சலி’ மருந்துகளுக்கு தடையா? காங்கிரஸ் எம்பி அளித்த புகார் : ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 6:07 pm
Patanjali - Updatenews360
Quick Share

யோகா குருவும், பாஜகவின் அனுதாபியாகவும் அறியப்படும் பாபா ராம்தேவ் சார்பில் தொடங்கப்பட்டது பதஞ்சலி நிறுவனம்.

பல்வேறு நோய்களுக்கான லேகியம், டானிக் போன்ற மருந்துகளையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களையும் பதஞ்சலி தயாரித்து விற்பனை செய்தது .

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் நாடு முழுவதும் இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக பதஞ்சலி பெரிய அளவில் விளம்பரங்களை செய்தது.

இதனால் மக்களின் கவனம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது விழ ஆரம்பித்தது. அந்த சமயம், பல முன்னணி நிறுவனங்களை லாபத்தில் ஓரம்கட்ட தொடங்கியது பதஞ்சலி.

மேலம் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. குறிப்பாக ‘மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954’க்கு புறம்பாக சில விளம்பரங்கள் உள்ளதாக கேரளாவை சேர்ந்த மருத்துவர் கே.வி. பாலு என்பவர் புகார் அளிததார்.

ஆனால் மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சட்ட விதி 170 தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மருத்துவர் பாலு இந்த விவகாரத்தை விடவில்லை, தான் சட்டம் 1954ஐ தான் குறிப்பிட்டேனே தவிர சட்ட விதி 170ஐ தான் குறிப்பிடவே இல்லை என கூறியிருந்தார்.

ஆனால் மருத்துவரின் புகார் குறித்து ஆயுஷ் அமைச்சகம் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது மருத்துவர் பாலு அளித்த புகாரை போலவே ஒரு புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954ஐ மீறிய பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தகண்ட் அரசின் உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது

இதனால் மீண்டும் பதஞ்சலி நிறுவனத்தின் மீதான புகார் தூசு தட்டப்பட்டுள்ளது. சட்ட மீறல் உறுதிப்படுத்தப்பட்டால் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.

Views: - 356

0

0