வேன் நிறைய பணமா? கிண்டல் பண்ணாம அதானி, அம்பானி வீட்டுக்கு EDஐ அனுப்புங்க.. மோடிக்கு ராகுல் பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2024, 9:43 am

வேன் நிறைய பணமா? கிண்டல் பண்ணாம அதானி, அம்பானி வீட்டுக்கு EDஐ அனுப்புங்க.. மோடிக்கு ராகுல் பதிலடி!

காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார்.

நாட்டின் பிரபல தொழிலதிபர்களான அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும், ராகுல் காந்தியும், தற்போது அதை நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

அவர்களிடம் இருந்து வேன் நிறைய கட்டுக்கட்டாக பணம் காங்கிரஸ் பெற்றுள்ளதா? என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமரின் இந்த உரைக்கு ராகுல் காந்தி நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் தனது தனிப்பட்ட அனுபவத்தை கூறியிருப்பதாக கிண்டல் செய்துள்ளார்.

மேலும் படிக்க: இனி ஆவினையும், அரசையும் நம்பி பலனில்லை : அமுல் நிறுவனத்துக்கு சிவப்பு கம்பளம்.. பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு!

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-பிரதமர் மோடி இந்த இரண்டு தொழிலதிபர்களுக்கு (அதானி, அம்பானி) கொடுத்த பணத்தை, காங்கிரஸ் கட்சி வாக்குறுதியளித்த பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அதே தொகையை வழங்கும். பா.ஜனதாவின் இந்த வேன் ஊழலின் டிரைவர் யார்? உதவியாளர் யார்? என்பதை நாடறியும்” என்றார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?