சர்ஃபிராஸ் கான் ரன் அவுட்டால் ரசிகர்கள் கோபம்… வருத்தம் தெரிவித்து ஜடேஜா போட்ட பதிவு..!!

Author: Babu Lakshmanan
15 February 2024, 9:51 pm

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக அறிமுக வீரருக்கு வழங்கப்படும் தொப்பியை சர்ஃபிராஸ் கான் பெறும் போது, அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் கண்ணீர் விட்ட சம்பவம் மைதானத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

இதைத் தொடர்ந்து, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் (10), கில் (0), ரஜத் பட்டிதர் (5) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் உள்ளூர் வீரரான ஜடேஜா இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர், அறிமுக வீரரான சர்ஃபிராஸ் கான் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய இவர் அரைசதம் அடித்து அசத்தினார். 99 ரன் எடுத்திருந்த போது, சதத்திற்கான ரன் எடுக்க முயன்ற ஜடேஜா, பின்னர் வேண்டாம் எனக் கூறியதால், எதிர் முனையில் இருந்த சர்ஃபிராஸ் கான் ரன் அவுட்டானார். இது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், சர்ஃபிராஸ் கான் குடும்பத்தினரும் அதிர்ந்து போயினர். அதேவேளையில், ஜடேஜாவின் தவறான அழைப்பால் சர்ஃபிராஸ் கான் ரன் அவுட் ஆனதால், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கேப்டன் ரோகித் ஷர்மா, கடுப்பாகி தொப்பியை ஓங்கி தரையில் அடித்தார். இது கேமிராவில் பதிவாகியது.

இந்த சம்பவம் நடந்தாலும், மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்திருந்தது.

சதமடிக்கும் வகையிலான ஒரு அற்புதமான ஆட்டத்தை விளையாடிய சர்பராஸ் கான், 62 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சோகமுகமாக வெளியேறினார். இந்த நிகழ்வை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜாவின் செயலுக்கு கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், ஜடேஜா மீது ரசிகர்களும் அதிருப்தியடைந்தனர்.

இந்த நிலையில், தன்னுடைய தவறான அழைப்பால் சர்பராஸ் கான் அவுட்டானதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஜடேஜா கருத்து பதிவிட்டுள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?