ஜெய் ஸ்ரீராமுக்கு எதிராக ஜெய்பீம் முழக்கம் : பள்ளியில் மதத்தால் உருவான கோஷ்டி : பதற்றம்.. போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 7:31 pm
Jaisri Ram Jai Bheem - Updatenews360
Quick Share

கர்நாடகா : ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பியூ கல்லூரிகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிராக ஜெய்பீம் கோஷம் உருவெடுத்துள்ளது.

கர்நாடக பியூ கல்லூரிகளில் 12ம் வகுப்பு பயிலும் இஸ்லாமி மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வந்து இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்னங்கள் குவிந்த நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கர்நாடக காங்கிரசார் போராட்டம் நடத்தினர். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடத்திய மக்கள் ஹிஜாப் நிறத்தை சீருடை நிறத்திற்கு மாற்றுவதாக கூறினர். அதே சமயம் நீக்கமுடியாது என மக்கள் கூறினர்.

இந்த நிலையில் பியூ கல்லூரிகளில் காவித்துண்டு அணிந்து வந்த இந்து மாணவர்களுக்கு எதிராக ஒரு தரப்பு மாணவர்கள் நீல துண்டு அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவத்தனர். காவித் துண்டு அணிந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட, நீலத் துண்டு அணிந்தவர்கள் ஜெய்பீம் என கோஷமிட்னர்.

இருதரப்பினர் எதிரெதிரே நின்று கோஷம் எழுப்பியதால் கல்லூரிகளில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். கல்லூரிக்கு வந்த போலீசார் உடனே மாணவர்களை வெளியேற்றினர். மேலும் சீருடை அணிந்து வருவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர்.

அதே சமயம் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எந்த தடையும் இல்லை என அறிவித்துள்ளனர். ஹிஜாப் அணிந்தால் காவி அணிவோம் என ஒரு பிரிவு மாணவர்களும், காவி அணிந்தால் நீலம் அணிவோம் என மற்றொரு பிரிவு மாணவர்களும் கல்வி பயிலும் இடத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளது மதக்கலவத்தை தூண்டிவிடுமோ என் அச்சம் எழுந்துள்ளது.

Views: - 841

0

0