பள்ளிக்கு பொட்டு வைத்து வந்த மாணவிகளை அடித்த ஆசிரியர்… வழக்குப்பதிவு செய்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
8 April 2022, 11:39 am

ஜம்மு – காஷ்மீரில் பள்ளிக்கு பொட்டு வைத்து வந்த மாணவிகளை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 4ம் தேதி இந்து மதத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி பொட்டு வைத்தும், மற்றொரு மாணவி ஹிஜாப் அணிந்தும் சென்றுள்ளார். நெற்றியில் பொட்டு வைத்து விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். அம்மாணவிகளை வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக தாக்கி திட்டியுள்ளார்.

மாணவிகள் தாக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியர் நசீர் அகமது மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆசிரியர் நசீர் அகமதுவை ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!