நாடாளுமன்ற தேர்தல்… காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் சூப்பர் ஸ்டாரின் மனைவி ; எந்தத் தொகுதியில் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
8 March 2024, 10:00 pm

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரபல நடிகரின் மனைவி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து இண்டியா எனும் கூட்டணியை அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் கட்சி நிறைவு செய்து விட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதகாரணம் கண்ணூர் தொகுதியிலும், ஆலப்புழா தொகுதியில் கேசி வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ராஜ்நந்த்கான் தொகுதியிலும், டிகே சுரேஷ்- பெங்களூர் ஊரக தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

அதேபோல, கன்னட சூப்பர் ஸ்டாரும், புகழ்பெற்ற நடிகருமான சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!