அன்று காங்கிரஸ்… இன்று கம்யூனிஸ்ட்… அடுத்தடுத்து அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்.. கேரளாவில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
1 July 2022, 9:23 am

கேரளாவில் : திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதை அறிந்த அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!