தமிழகத்தில் கொரோனா கிடு கிடு உயர்வு… பள்ளிகளில் புதிய கட்டுப்பாடுகள் : மீண்டும் ஊரடங்கு? நாளை அவசர ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 10:01 pm
Corona CM - Updatenews360
Quick Share

கொரனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்தில் நுழையும் அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபரை முறையாக பரிசோதித்து தனிமைப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்திற்குள் சோப்பு, சானிடைசர் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும். இந்த அனைத்து அறிவுரைகளையும் கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. இதனால், மக்கள் மீண்டும் ஊரடங்கு வருமா என்ற அச்சத்தில் உள்ளனர். இதனிடையே நாளை கொரோனா பரவல் தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கொரோனாவால், உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சூழ்நிலையிலும், மீண்டும் ஊரடங்கு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Views: - 119

0

0