அதிமுக பொதுக்குழு விவகாரம் : ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 8:41 pm
EPS OPS - Updatenews360
Quick Share

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் பதிலளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவிற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வருகிற ஜீலை 4-ந் தேதி பதிலளிக்க சென்னை உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Views: - 113

0

0