எனக்கு இன்னும் வரன் அமையல.. தமிழ் பையன் இருந்தால் என் அண்ணனிடம் சொல்லுங்கள் : தமிழில் பாட்டு பாடி ரூட் போட்ட கேரள பெண் எம்பி!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 4:55 pm

தேசிய இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள், புதிதாக வெற்றிபெற்ற காங்கிரஸ் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் பீவி, கேரள காங்கிரஸ் ஆலத்தூர் எம்பி ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதல் மொழி உரிமை பற்றி பேசிய எம்பி, ரம்யா ஹரிதாஸ், தமிழ்நாட்டில் இந்தி பாடல்கள் பலருக்கு தெரியும். நான் ஒரு தேசிய இளைஞர் காங்கிரஸ் செயலாளர். இதற்காக நான் இந்தி பாடல் பாட முடியுமா ? பாடினால் உங்களுக்குத்தான் பிடிக்குமா? சொல்லுங்கள் பிடிக்குமா? என்று கேட்டார்.

உடனே கூட்டத்தில் உள்ளவர்கள் பிடிக்காது என சத்தம் போட, உடனே மூன்றாம் பிறை படத்தில் வந்த கண்ணே கலைமானே பாடலை பாடினார். சுருதி குறையாமல் பாடியதை கேட்டு மெய் மறந்த நிர்வாகிகள் கைகளை தட்டி உற்சாகமூட்டினர்.

பின்னர் பேசிய ரம்யா ஹரிதாஸ், நான் பொள்ளாச்சி பக்கம்தான், பாலக்காட்டில் உள்ள ஆலத்தூர் தான் என் தொகுதி, அங்கே எல்லாரும் தமிழ் பேசுவார்கள். அங்கு நான் மலையாளத்தல் பாட முடியாது. அவர்களுக்கு பிடித்தது தமிழ் பாடல்தான் என கூறினார்.

தொடர்ந்து என் ஆசை மச்சான் படத்தில் வரும் ஆடியே சேதி சொல்லி பாடலை அடிபிறழாமல் பாடினார். பின்னர் பேசிய அவர், நான் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, எனக்கு வரனும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு வேளை தமிழ் பையன் இருந்தால் என் அண்ணன் ஸ்ரீநிவாஸிடம் சொல்லுங்கள் என்று நகைச்சுவையாக கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!