பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழப்பு… கேரளாவில் பயங்கரம்!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 7:45 pm
Quick Share

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கல பகுதி புத்தன் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் பிரதாப் (64). இவரது மனைவி ஷெர்லி (53). இவர்களது இளைய மகன் அகில் (25). மூத்த மகன் நிகில் (28) அவரது மனைவி அபிராமி (24) மற்றும் அவரது 8 மாத குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை வீடு முழுவதும் திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் அங்கு வந்த தீ அணைப்பு துறையினர், தீயை அணைக்க போராடினர்.

ஆனால், தீயை அணைத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது, பச்சிளம் குழந்தை உட்பட 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்து கிடந்தனர். மூத்த மகன் மட்டும் நிகில் (28) லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்ந்து அவரை மீட்ட தீ அணைப்பு துறையினர் திருவனந்தபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கேரளாவையே உலுக்கிய இந்த சம்பவம் கொலையா..? அல்லது தற்கொலையா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 512

0

0