மணிப்பூர் விவகாரம்…. நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்!!!
Author: Udayachandran RadhaKrishnan24 ஜூலை 2023, 10:14 காலை
மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு வரும் கலவரம் மற்றும் அதில் 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன.
ஆனால் மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வாருங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து வருகிறது.
இந்தநிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளன. மாநிலங்களவையில் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அதேபோல மக்களவையில் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
0
0